Tuesday, June 29, 2010
Saturday, June 26, 2010
முட்டாள் இதயத்திற்கு
நீ என்னிடம் பேசிய தருணங்களை நினைத்து ....
இன்பத்தில் திளைக்கும் என் முட்டாள் இதயத்திற்கு ..
எப்படி புரியவைப்பேன்
அன்று நீ "பிடிக்கவில்லை" என்று சொன்னாய் என்று..
Friday, June 18, 2010
தற்பெருமை
நான் வேண்டாம் என்று சொல்லியும் ..
என் கவிதைகளை படிக்கிறாய்..
தற்பெருமை உன்னை பற்றி கொண்டால்
நான் பொறுப்பல்ல...
Sunday, May 30, 2010
பிழைக்க தெரியாதவன்
பிழைக்க தெரியாதவன் தான் நான் ..
இல்லையென்றால் உன் ஒற்றை பார்வைக்கு
என் இதயத்தை உனக்கு விற்று இருப்பேனா ?
Saturday, May 29, 2010
அழகான வாழ்கை
நீ நினைத்து கூட பார்க்கமுடியாத அழகான வாழ்கையை
என் நினைவிலும் கனவிலும் என்னோடு வாழ்கிறாய் ..
ஆம் என்று சொல் நிஜத்திலும் வாழ்வோம்...
இல்லை என்று சொன்னாலும் வாழ்வாய் .. வாழவைப்பேன்
அதற்கு மறுநாள் நாள் நான் இறந்திருப்பேன் .........
உலகம் தெரியாதவன்
என் ஊரில் சொன்னார்கள்
நான் உலகம் தெரியாதவன் என்று..
பாவம் அவர்களுக்கு எப்படி தெரியும்
நீ தான் என் உலகம் என்று..
Friday, May 28, 2010
வானவில்
வீட்டு மொட்டை மாடியில்
உன் சுடிதார் துப்பட்டாவை காய வைக்காதே.
வானவில் என நினைத்து
சிறுவர்கள் கூட்டம் உன் வீட்டை சூழ்ந்தால் என்ன செய்வாய் .......
Thursday, May 27, 2010
ஆத்திசுடி
கல்வித்துறை என்வசம் இருந்தால்...
உன் கல்லூரி பாடப்புத்தகத்தில்
ஆத்திசுடியை சேர்த்திருப்பேன்
"காதல் செய்ய விரும்பு " என வரிகளை மாற்றி ....
எட்டப்பனாய் உன் கண்கள்
நீ கட்டபொம்மன் போல்..
என்னை காதலிக்க மாட்டேன் என்கிறாய் ...
உன் கண்கள் எட்டப்பனாய்..
உன் காதலை என்னக்கு காட்டி கொடுகிறதே....
ஏசுநாதர் நினைவிற்கு வருகிறார்
ஏசுநாதர் நினைவிற்கு வருகிறார்..
நீ என் ஒரு கன்னத்தில் முத்தமிடும் போது...
நீ நினைவிற்கு வருகிறாய்
ஒரு குழந்தை எனக்கு முத்தமிட்ட போது...
ஒன்றாம் வகுப்பு ஆசிரியர்
அன்று என் ஒன்றாம் வகுப்பு ஆசிரியர்
உனக்கு யாரை பிடிக்கும் என்றார்
'அம்மா' என்றேன்
இன்று கேட்டால்
பதில் சொல்லாமல் உதைவாங்கி இருப்பேன்..
அன்று என் ஒன்றாம் வகுப்பு ஆசிரியர்
ஒருமைக்கு உதாரணம் கேட்டார்
'நிலா' என்றேன்
இன்று கேட்டால்
"நீ" என்று சொல்லியிருப்பேன் ....
Wednesday, May 26, 2010
ஏன் இவ்வளவு பொறமை
உன் முகத்தின் மீது உன் கண்களுக்கு ஏன் இவ்வளவு பொறமை
ஒரு முறை கூட உன் முகத்தை பார்க்க என்னை விடுவதில்லையே ....
யாராவது நினைத்தால்
"யாராவது நினைத்தால் பொறை ஏறுமாம் "
உண்மையா என்கிறாய் ..
அது பொய் என்று உனக்கு நான் சொல்லித்தான் தெரிய வேண்டுமா ?
உனக்கு யாரை பிடிக்கும்
முதல் முறை ஒரு பதில் கேள்வி கேட்பதாய் உணர்கிறேன் ...
"உனக்கு யாரை பிடிக்கும்' என்று நீ கேட்கும் தருணங்களில் ..
ஒற்றை கருவில் ஓராயிரம் குழந்தை
ஒற்றை கருவில்
ஓராயிரம் குழந்தை பெற்றேன் ...
அதற்கு கவிதை என்று பெயரிட்டேன்..
காரணம் உன் கண்கள் என்று மட்டும் ஏனோ உன்னிடம் சொல்ல மறந்தேன்..
Saturday, May 22, 2010
Friday, May 21, 2010
Thursday, May 20, 2010
உன் பிறந்தநாளில்
உன் பிறந்தநாளில் நீ தரும் இனிப்பை ஏற்க என் இதயம் மறுக்கிறது
நீ பிறக்கும்போது இந்த நாளில் அழுது இருப்பாய் என்று ..
Wednesday, May 19, 2010
மதிப்பெண்
பாடபுத்தகத்தின் முதல் பக்கத்தில்
உன் பெயரை எழுதி
அதை கவிதை புத்தகமா மாற்றிய மதி பெண்ணே ...
உனக்கு மதிப்பெண் பற்றி கவலை எதற்கு ?
உன் பெயரை எழுதி
அதை கவிதை புத்தகமா மாற்றிய மதி பெண்ணே ...
உனக்கு மதிப்பெண் பற்றி கவலை எதற்கு ?
கண்ணீர் என்றால் என்ன?
என் விரலை பிடிக்கும் முன் ..
ஒரு முறையேனும் அழுது விட்டுவா...
என்றாவது ஓர்நாள் நம் குழந்தை
கண்ணீர் என்றால் என்ன? என்று கேட்டால் என்ன சொல்வாய்..
Tuesday, May 18, 2010
உன் விட்டிற்கு நான் வந்த போது ...
யாருக்கும் தெரியாமல்
உன்னை பார்க்க உன் விட்டிற்கு
நான் வந்த போது ...
உன் வீட்டு கோலம் சொன்னது...
"நீ எதையோ கிறுக்கிவிட்டு
கவிதை என்கிறாய் !
ஒரு கவிதை கிறுக்கிய
கிறுக்கல் நான் "என்றது..
உன் வீட்டு அழைப்புமணி சொன்னது..
"அவள் அபூர்வமாய் மீட்டும் வீணை நான்." என்றது
உன் வீட்டு மிதியடி சொன்னது.
"மதி அவள் மிதிக்கும் மதியடி நான் " என்றது
உன் வீட்டு நாய்குட்டி சொன்னது.
"செல்ல பிராணி அல்ல நான்
உன் செல்லம் வளர்க்கும் பிராணி நான்" என்றது ..
உன் வீட்டு பூச்செடி சொன்னது.
"ஒரு பூ வளர்க்கும் பூச்செடி நான் " என்றது ..
உன் வீட்டு மொட்டைமாடி சொன்னது.
"அவள் அழகை ரசிக்க வரும் நிலவையும் மழையையும் விரட்டும் காவலன் நான்"என்றது ..
உன் வீட்டு பூஜை அறை சொன்னது..
"கோவிலில் சிறு அறை நான்" என்றது
உன் வீட்டு படுக்கையறை சொன்னது.
"அவள் தூங்குவதை பார்த்தே தூக்கம் தொலைத்தவன் நான்" என்றது ..
உன் வீட்டு சமயலறை சொன்னது.
"உணவு பொருட்களை சொர்க்கம் அனுப்பும் சொர்க்க வாசல் நான்" ..என்றது ..
உன் வீட்டு குளியலறை சொன்னது....
"உண்மையில் அழகில் குளிப்பவன் நான்" என்றது
இவையெல்லாம் திடிரென
நீ யார் என்றது..
எதுவும் சொல்லாமல் வந்துவிட்டேன்..
எப்படி சொல்வேன் அவைகளிடமிர்ந்து
உன்னை பிரித்து செல்ல வந்தேன் என்று..
Monday, May 17, 2010
கேள்விகள் ஆயிரம்....
எனக்கு பதில் தெரியாத கேள்விகள் ஆயிரம்....
நான் பதில் சொல்லமுடியாத ஒரே கேள்வி
"நான் இல்லை என்றால் ?"
நீ கேட்கும் போது மட்டும்...
பரிசு
நான் கண்ட கனவுகளை கொண்டு
உனக்கு பரிசளிக்க சொன்னால் ...
கண்ணாடி மளிகை தருவேன் ...
கனவில் எல்லாம் உன் பிம்பமே ......
Friday, May 14, 2010
நான் அரசவை புலவனாய் இருந்திருந்தால்.
நான் அரசவை புலவனாய் இருந்திருந்தால்..
உன் பெயரை சொல்லியே
பொற்காசுகள் வங்கி இருப்பேன்...
அழகை பற்றி ஆயிரம் கேள்விகள் எழுந்தாலும்.
Thursday, May 13, 2010
உனக்கு மட்டும் தனியிடம்..
என் வாழ்வில் உனக்கு மட்டும் தனியிடம்..
நான் விரும்பியது எல்லாம் கிடைக்க..
கிடைக்காத ஒரே ஒரு பொருளாய் நீ !
தேவதைகள்
"தேவதைகள் வெண்ணிற ஆடைகள் உடுத்துமாம்"..
உண்மையா என்றேன் ...
ஒன்றுமே சொல்லாமல் சிரித்துவிட்டு சென்றாய்..
நீல நிற சுடிதாரில் வந்து...
Wednesday, May 5, 2010
நியாயவிலை கடை
இதையும் பதிக்கி வைத்திருப்பார்களா ..
என்று நினைக்கதோன்றுகிறது...
நியாயவிலை கடைகளில்
"அ"- வை முதல் எழுத்தாக ...
Saturday, May 1, 2010
வருக! வருக!
"ஜாதிகள் ஒழிப்போம்" மாநாட்டிற்கு
வருகை தரும் அணைத்து
ஜாதி கட்சி தலைவர்களையும்
வருக! வருக! என வரவேற்கிறோம்
என் படைப்பில் அழகு
நான் கனவுலகில் பிரம்மலோகம் சென்ற போது
அங்கு "என் படைப்பில் அழகு" என்ற புத்தகத்தை பார்த்தேன் ..
அதை யாருக்கும் தெரியாமல்
அவசர அவசரமாய் புரட்டிய போது ..
கடைசி பக்கத்தில் முடிவுரையாய் உன் பெயர் ..
Friday, April 30, 2010
Thursday, April 29, 2010
பிடிக்காது
உனக்கு பிடித்ததை மட்டுமே செய்யும்
பிடிக்காதவன் நான்..
என்னை பிடிக்காது என்று தெரிந்தும்
எனக்கு பிடித்தவள் நீ !
எரிப்பதா ? புதைப்பதா ?
எரிப்பதா ? புதைப்பதா ?
சண்டைகள் இல்லை
முதலில் எரித்துவிட்டு
பின் புதைக்கிறான்
வயிறு எனும் சுடுகாட்டில்..
கோழிகளையும் ஆடுகளையும் ...
Tuesday, April 27, 2010
எதிர்காலமும் நிகழ்காலமும்
என் எதிர்காலமும் நிகழ்காலமும்
சந்தித்து கொள்கிறது..
நீ என்னை கடந்து செல்லும்
தருணங்களில் ...............
விளக்கை மட்டுமல்ல
உன் வாழ்கை விளக்கை
நீ ஏற்ற முயலாமல்
அடுத்தவன் கையில் தந்தாள் ..
அவன் அணைக்கத்தான் செய்வான் ..
விளக்கை மட்டுமல்ல ....
உன்னையும் தான்
ஞானபழம்
ஞானபழம் சண்டையில்
நான் இருந்திருந்தால் ..
பிள்ளையார் இருவரை சுற்றிவருவதற்குள் ..
உன் ஒருத்தியை சுற்றிவந்து
நான் ஜெய்திருபேன்..
Monday, April 26, 2010
காத்திருக்கையில்
உனக்காக கால்கடுக்க
காத்திருக்கையில்
நண்பனின் ஆறுதல் வார்த்தை
"அவ கண்டிப்பா வருவா மச்சி"
நண்பனுக்கு நான் சொல்லும் ஆறுதல் வார்த்தை
"வேற என்ன சாப்புடுற மச்சி"
ஒரு பொய் ஒரு மெய்
உனக்காக ஒரு பொய் :
"காதல்" இது உயிர்மெய் எழுத்துகள் அல்ல
இரு உயிர்களின் மெய் எழுத்துகள்.
ஊருக்காக ஒரு மெய் :
ஆயிரம் கவலைகளில்
ஆயிரதோரவது கவலை
காதல்
எனக்காக
எனக்காக உன்னிடம்
பேசட்டுமா என்று கேட்கிறார்..
நான் சவரம் செய்யும் கடைக்காரர் ..
வியாபார நோக்கத்தோடு..
உன்னை பற்றி
தாயின் மடியில் படுத்து கொண்டு
உன்னை பற்றி சொல்வதைபோல்
உணர்கிறேன்
என் தமிழில் உன்னை பற்றி
எழுதுகையில்....
அரிதாய்
அரிதாய் பூக்கும் குறுஞ்சி மலரே
அரிதாய் வழியும் ஆனந்த கண்ணீரே
உங்கள் ஆணவம் அழிந்தது
ஆம் இன்று
அவள் கண்கள் என்னை
பார்த்து விட்டு சென்றன..
Subscribe to:
Posts (Atom)