Tuesday, May 18, 2010
உன் விட்டிற்கு நான் வந்த போது ...
யாருக்கும் தெரியாமல்
உன்னை பார்க்க உன் விட்டிற்கு
நான் வந்த போது ...
உன் வீட்டு கோலம் சொன்னது...
"நீ எதையோ கிறுக்கிவிட்டு
கவிதை என்கிறாய் !
ஒரு கவிதை கிறுக்கிய
கிறுக்கல் நான் "என்றது..
உன் வீட்டு அழைப்புமணி சொன்னது..
"அவள் அபூர்வமாய் மீட்டும் வீணை நான்." என்றது
உன் வீட்டு மிதியடி சொன்னது.
"மதி அவள் மிதிக்கும் மதியடி நான் " என்றது
உன் வீட்டு நாய்குட்டி சொன்னது.
"செல்ல பிராணி அல்ல நான்
உன் செல்லம் வளர்க்கும் பிராணி நான்" என்றது ..
உன் வீட்டு பூச்செடி சொன்னது.
"ஒரு பூ வளர்க்கும் பூச்செடி நான் " என்றது ..
உன் வீட்டு மொட்டைமாடி சொன்னது.
"அவள் அழகை ரசிக்க வரும் நிலவையும் மழையையும் விரட்டும் காவலன் நான்"என்றது ..
உன் வீட்டு பூஜை அறை சொன்னது..
"கோவிலில் சிறு அறை நான்" என்றது
உன் வீட்டு படுக்கையறை சொன்னது.
"அவள் தூங்குவதை பார்த்தே தூக்கம் தொலைத்தவன் நான்" என்றது ..
உன் வீட்டு சமயலறை சொன்னது.
"உணவு பொருட்களை சொர்க்கம் அனுப்பும் சொர்க்க வாசல் நான்" ..என்றது ..
உன் வீட்டு குளியலறை சொன்னது....
"உண்மையில் அழகில் குளிப்பவன் நான்" என்றது
இவையெல்லாம் திடிரென
நீ யார் என்றது..
எதுவும் சொல்லாமல் வந்துவிட்டேன்..
எப்படி சொல்வேன் அவைகளிடமிர்ந்து
உன்னை பிரித்து செல்ல வந்தேன் என்று..
Subscribe to:
Post Comments (Atom)
MinMini.com பார்த்தீங்களா..? இல்லையா..?
ReplyDeleteஅப்புறம் சீட் கிடைக்கலைன்னு
Feel பண்ணக்கூடாது..