Friday, April 30, 2010
Thursday, April 29, 2010
பிடிக்காது
உனக்கு பிடித்ததை மட்டுமே செய்யும்
பிடிக்காதவன் நான்..
என்னை பிடிக்காது என்று தெரிந்தும்
எனக்கு பிடித்தவள் நீ !
எரிப்பதா ? புதைப்பதா ?
எரிப்பதா ? புதைப்பதா ?
சண்டைகள் இல்லை
முதலில் எரித்துவிட்டு
பின் புதைக்கிறான்
வயிறு எனும் சுடுகாட்டில்..
கோழிகளையும் ஆடுகளையும் ...
Tuesday, April 27, 2010
எதிர்காலமும் நிகழ்காலமும்
என் எதிர்காலமும் நிகழ்காலமும்
சந்தித்து கொள்கிறது..
நீ என்னை கடந்து செல்லும்
தருணங்களில் ...............
விளக்கை மட்டுமல்ல
உன் வாழ்கை விளக்கை
நீ ஏற்ற முயலாமல்
அடுத்தவன் கையில் தந்தாள் ..
அவன் அணைக்கத்தான் செய்வான் ..
விளக்கை மட்டுமல்ல ....
உன்னையும் தான்
ஞானபழம்
ஞானபழம் சண்டையில்
நான் இருந்திருந்தால் ..
பிள்ளையார் இருவரை சுற்றிவருவதற்குள் ..
உன் ஒருத்தியை சுற்றிவந்து
நான் ஜெய்திருபேன்..
Monday, April 26, 2010
காத்திருக்கையில்
உனக்காக கால்கடுக்க
காத்திருக்கையில்
நண்பனின் ஆறுதல் வார்த்தை
"அவ கண்டிப்பா வருவா மச்சி"
நண்பனுக்கு நான் சொல்லும் ஆறுதல் வார்த்தை
"வேற என்ன சாப்புடுற மச்சி"
ஒரு பொய் ஒரு மெய்
உனக்காக ஒரு பொய் :
"காதல்" இது உயிர்மெய் எழுத்துகள் அல்ல
இரு உயிர்களின் மெய் எழுத்துகள்.
ஊருக்காக ஒரு மெய் :
ஆயிரம் கவலைகளில்
ஆயிரதோரவது கவலை
காதல்
எனக்காக
எனக்காக உன்னிடம்
பேசட்டுமா என்று கேட்கிறார்..
நான் சவரம் செய்யும் கடைக்காரர் ..
வியாபார நோக்கத்தோடு..
உன்னை பற்றி
தாயின் மடியில் படுத்து கொண்டு
உன்னை பற்றி சொல்வதைபோல்
உணர்கிறேன்
என் தமிழில் உன்னை பற்றி
எழுதுகையில்....
அரிதாய்
அரிதாய் பூக்கும் குறுஞ்சி மலரே
அரிதாய் வழியும் ஆனந்த கண்ணீரே
உங்கள் ஆணவம் அழிந்தது
ஆம் இன்று
அவள் கண்கள் என்னை
பார்த்து விட்டு சென்றன..
Saturday, April 24, 2010
Friday, April 23, 2010
Thursday, April 22, 2010
கவிதை புத்தகம்
உன் பெயரை வைத்துகொண்டு
என்னால் ஒரு கவிதை புத்தகமே தொகுக்க முடியும் ..
ஆனால் யோசிக்கிறேன்
மற்றவர்கள் படித்தால் அவர் கை படுமே என்று..
நீ அதை வெயில்கால விசிறியாக்கிவிடுவாய் என்று..
இஞ்சி வாங்க இரண்டு கிலோமீட்டர்
மதிய வெயிலிலும்
இருபது கடைகளை கடந்து
இரண்டு கிலோமீட்டர் வருகிறேன்..
இரண்டு ரூபாய்க்கு இஞ்சி வாங்க...
உன் வீட்டு பக்கத்துக்கு கடைக்கு...
அட்சயபாத்திரமாய்
அட்சயபாத்திரமாய் என் காதல் ...
என்றும் குறைவதே இல்லை..
அதன் எதிர்பதமாய் உன் இதயம்..
அதில் என் காதல் நிறைவதே இல்லை..
Wednesday, April 21, 2010
உன் வீட்டை கடக்கும் நேரம்
நான் தினம் வீட்டிற்கு நடந்தே செல்கிறேன்..
பைக்கில் செல்லும்போதும்
நடந்து செல்லும்போதும்
உன் வீட்டை கடக்கும் நேரத்தை கணக்கிட்டபின் ....
Tuesday, April 20, 2010
பொய்
பொய் சொல்லும் ...
உன் கண்களை நம்புவதைவிட...
பேசாமல் இருக்கும்
கடவுளை நம்பிவிடலாம் ..
என்று நினைக்கிறன் சில நேரங்களில் ...
நிலா ,மலர், மழை
நிலா ,மலர், மழை ,மேகம் ,
இரவு,பகல் ,விண்மீன் ...
இவையாவும் உன்னால் உயிர் பெற்றன.
என் கிறுக்கல்களில்..
வெட்கம்
உன் பார்வை பிடிக்கும்
என்றேன் சிரிக்கிறாய்..
உன் சிரிப்பு பிடிக்கும்
என்றேன் வெட்கபடுகிறாய்...
உன் வெட்கம் பிடிக்கும் என்பேன் ..
என்ன செய்வாய் ?
கோவபடுவையா..
உனகே தெரியும் அதுவும் எனக்கு பிடிக்கும் என்று...
Monday, April 19, 2010
ஏன் தொடர்கிறாய்...
ஏன் என்னை தொடர்கிறாய் என்றாய்...
அந்த கணம் சொல்ல வார்தைவரவில்லை..
என் வாழ்கையின் தொடர்ச்சி நீ தான் என்று..
Saturday, April 17, 2010
பெயர் போட்டி
ஆயிரம் முறை உன் பெயரை
எழுதி இருக்கிறேன் ..
ஒரு முறை தான்
நீ என் பெயரை எழுதினாய்
திரு .............................................. அவர்கள் என்று..
உன் திருமண பத்திரிகையில் ..
யாரை பிடிக்கும்
கோவில்
வாரவாரம் கோவிலுக்கு
நீ கடவுளை பார்க்கவருகிறாய்...
நான் உன்னை பார்க்கவருகிறேன்
கடவுள் உன்னிடம் பேசுவதில்லை ..
நீ என்னிடம் பேசுவதில்லை ..
நம்பிக்கை ஒன்று தான்..
உன்னக்கு கடவுள்
எனக்கு காதல்
நிலவும் நீயும்
நிலவின் வளர்பிறை
உன்னை போல் அழகாக வேண்டுமென்ற ஆசை
நிலவின் பொவுர்ணமி
உன் அழகொடு ஒபிட்டு பார்ப்பது ...
நிலவின் தேய்பிறை
அதன் தற்கொலை முயற்சி ...
Friday, April 16, 2010
உலக அழகி போட்டி
உலக அழகி போட்டிக்கு
நீ மட்டும் சென்று விடாதே ..
உன்னால் ஆண்டுக்கு
ஒரு முறை நடைபெற்ற போட்டி
இனி ஆயுள்க்கு ஒரு முறை என மற்றபடலாம்...
மழையில்
மழையில் நனைய பிடிக்கும் என்று சொன்னாய்...
சற்றும் யோசிக்காமல்
மழையில் நனைந்தேன்
நீ குடைக்குள் நின்று கொண்டு சொன்னாய்...என்பதையும் மறந்து..
மூளை முட்டாள் என்றது
என் மூளை என்னை முட்டாள் என்றது ..
காரணம் கேட்டேன் ..
நித்தம் அவளை பற்றியே
யோசிக்க நான் எதற்கு உனக்கு என்றது..
இளமை காதல்
தன் காதலியை இதயத்தில் சுமந்து கொண்டு
சுகமாய் இருக்கிறது என்று சொல்கிறான் ...
தன் தந்தையின் தோள்களில் ஏறிக்கொண்டு....
Thursday, April 15, 2010
சோறு ..
சட்டியில் பருக்கையாய் சோறு ..
நான் உன்ன என் தாய் சொன்னாள்
என்னக்கு பசி இல்லை என்று ...
அவள் உன்ன நான் சொன்னேன்
என்னக்கு பிடிக்கவில்லை என்று..
Wednesday, April 14, 2010
கடிகாரத்தை பார்க்காமல்
நானும் பழைய பெருசு ஆகிவிட்டேன் ...
கடிகாரத்தை பார்க்காமல் மணி சொல்வதில்...
ஆனால் நான் சூரியனை பார்த்து சொல்லவில்லை
நீங்கள் சொல்லுங்கள் பார்போம் ..
நான் எப்படி சொல்கிறேன் என்று.
சிக்கிரம் அதற்குள்
மின்வெட்டு ஏற்பட்டு விடலாம் ..
எந்த ஏரியாபா நீ..
நாய்குட்டி
என் காதல் கூட
உன் வீட்டு நாய்குட்டி போலத்தான் ..
நீ கோபமாய் விரட்டியதில்லை...
நீ போ என்று சொன்னாலும் ..
உன்னை விட்டு போவதில்லை..
Tuesday, April 13, 2010
நானும் உன் வீட்டு கண்ணாடியும்
நானும் உன் வீட்டு கண்ணாடியும் ஒன்றுதான்..
நீ சிரித்தல் நானும் சிரிப்பேன் ..
நீ அழுதால் நானும் அழுவேன்...
நீ ஒரு கல் எரிந்து பார்..
கண்ணாடி உன் முன் நிற்காது..
நான் நிற்பேன் அதே சிரிப்போடு..
உன் பெயரை மட்டும் ...
தாயின் பெயரை எழுதினேன்
ஒன்றாம் வகுப்பு தேர்வில் ....
தந்தை பெயரை எழுதுகிறேன் ..
விண்ணப்ப படிவங்களில் ...
ஏனோ உன் பெயரை
ஆயிரம் முறை எழுதுகிறேன் ..
கையில் சிறு துரும்பு கிடைத்தாலும்..
Monday, April 12, 2010
குழந்தையின் பின்னல் ஓடும் தாயாய் போல :
தட்டில் சோறுடன்
குழந்தையின் பின்னல் ஓடும் தாயாய் போல
இதயத்தில் காதலுடன்
உன் பின்னல் ஓடி வருகிறேன் ......
தாயோ நிலவை காட்டி சோறு ஊட்டுவாள் ....
நான் என்ன செய்ய ....
நியே நிலவாய் இருக்க ......
Saturday, April 10, 2010
லப்டப்
உனக்கு செல்ல பெயர் வைத்துளேன்
"லப்டப்" என்று...
என் இதழ்கள் சொல்ல மறந்தாலும்..
என் இதயம் சொல்ல மறக்காது ... மறுக்காது
Friday, April 2, 2010
Subscribe to:
Posts (Atom)