Tuesday, March 30, 2010

மலராய் நீ

மலராய் நீ
மழையாய் நான்
குடையாய் உன் பெற்றோர்

Monday, March 29, 2010

பட்டம் பெற்றேன்


படித்தேன் புரியவில்லை 
படித்தும் முடிக்கவில்லை
ஆனால் பட்டம் பெற்றேன்
"காதல் தோல்வி" என்று
புத்தகத்தின் அட்டையில்
உன் பெயர்



Tuesday, March 23, 2010

தேர்தல் நேர தலைவர்கள் சிலை போல்..




தேர்தல் நேர தலைவர்கள் சிலை போல்..
அழகாய் இருக்கிறேன் ..
நீ என்னை கடக்கின்ற..
அந்த ஒரு நொடி மட்டும்..

என் இதயத்தில் மட்டும் இடம் கேட்காதே




அடி பெண்ணே ...
நீ உறங்க என் இதயத்தில் மட்டும் இடம் கேட்காதே..
என் இதய துடிப்பு கூட.. உனை தொந்தரவு செய்ய நான் விரும்பவில்லை..


Monday, March 22, 2010

நரை முடி...




இயற்கையிடம்  போராடி ...தோற்று ...
ஒவொரு மனிதனும் கடைசியில்  காட்டும் ...

சமாதான கொடி... இந்த நரை முடி ......


Thursday, March 18, 2010

ஒவொரு நொடியும்


ஒரு நொடியில் கண்களில் விழுந்து...
ஒவொரு நொடியும் நினைவில் நிற்கிறாய்..
கனவில் தொடர்கிறாய்..
நேரில் மட்டும் ஏனோ மறைகிறாய்....

Wednesday, March 3, 2010

இன்பமும் ..துன்பமும்..



உன் பிறப்பு உனக்கு இன்பத்தை தரவில்லை..
உன் இறப்பு உனக்கு துன்பத்தை தரவில்லை..
வாழும் பொழுதாவது இன்பத்தையும் துன்பத்தையும் ரசிப்போமே.....

தயவு செய்து சொல்லிவிடு



கடவுள் என்று ஒருவன் இருந்தால்..
அவன் என் முன் வந்து நின்றால் ..
ஓர் வரம் கேட்பேன் ..
"தயவு செய்து சொல்லிவிடு
நான் எந்த மதத்தையும் எந்த ஜாதியையும்
சேர்ந்தவன் இல்லை என்று.."

கடவுள்



கடவுள் மனிதனின் கற்பனைக்கு கிடைத்த முதல் வெற்றி ...
மனிதனின் கற்பனையை மதிக்க தெரிந்த உனக்கு ...
மனிதனை மதிக்க தெரியவில்லையே ஏன்?

LinkWithin

Related Posts with Thumbnails