Wednesday, May 5, 2010

விமானநிலைய கண்காட்சி



வழியனுப்ப நண்பர்கள்..
வரவேற்க உறவினர்கள்..
விமானநிலைய கண்காட்சி ....

நியாயவிலை கடை



இதையும்  பதிக்கி வைத்திருப்பார்களா ..
என்று  நினைக்கதோன்றுகிறது...
நியாயவிலை கடைகளில்
"அ"- வை  முதல் எழுத்தாக ...

பச்சை,சிவப்பு ,மஞ்சள்



பச்சை,சிவப்பு ,மஞ்சள் நிறங்கள்
கண்களுக்கு தெரிவதில்லை ....
வெள்ளை நிறம் அருகில் உலவும் வரை...

Saturday, May 1, 2010

வருக! வருக!



"ஜாதிகள் ஒழிப்போம்" மாநாட்டிற்கு
வருகை தரும் அணைத்து
ஜாதி கட்சி தலைவர்களையும்
வருக! வருக! என வரவேற்கிறோம்

என் படைப்பில் அழகு



நான் கனவுலகில் பிரம்மலோகம் சென்ற போது
அங்கு "என் படைப்பில் அழகு" என்ற புத்தகத்தை  பார்த்தேன் ..
அதை யாருக்கும் தெரியாமல்
அவசர அவசரமாய்  புரட்டிய போது ..
கடைசி பக்கத்தில் முடிவுரையாய் உன் பெயர் ..

LinkWithin

Related Posts with Thumbnails