Friday, April 16, 2010

மூளை முட்டாள் என்றது


என் மூளை என்னை முட்டாள் என்றது ..
காரணம் கேட்டேன் ..
நித்தம் அவளை பற்றியே
யோசிக்க நான் எதற்கு உனக்கு என்றது..

இளமை காதல்


தன் காதலியை இதயத்தில்  சுமந்து கொண்டு
சுகமாய் இருக்கிறது என்று சொல்கிறான் ...
தன் தந்தையின் தோள்களில் ஏறிக்கொண்டு....

சைக்கிளில் vs பைக்கில்


ஏனோ வலிகத்தான் செய்கிறது ..
சைக்கிளில் செல்லும் என் தந்தையை ..
நான் பைக்கில் கடந்து செல்லும் போது.

Thursday, April 15, 2010

சோறு ..



சட்டியில்  பருக்கையாய் சோறு ..
நான் உன்ன என் தாய்  சொன்னாள்
என்னக்கு பசி இல்லை என்று ...
அவள் உன்ன நான் சொன்னேன்
என்னக்கு பிடிக்கவில்லை என்று..

Wednesday, April 14, 2010

கடிகாரத்தை பார்க்காமல்


நானும் பழைய பெருசு ஆகிவிட்டேன் ...
கடிகாரத்தை பார்க்காமல்  மணி சொல்வதில்...
ஆனால் நான் சூரியனை பார்த்து சொல்லவில்லை
நீங்கள் சொல்லுங்கள் பார்போம் ..
நான் எப்படி சொல்கிறேன் என்று.
சிக்கிரம் அதற்குள்
மின்வெட்டு ஏற்பட்டு விடலாம் ..
எந்த ஏரியாபா நீ..

LinkWithin

Related Posts with Thumbnails